• Jul 23 2025

அஜித் விஜய்யை செல்லமாக இப்பிடித்தான் அழைப்பாரா?- இயக்குநர் வெங்கட் பிரபு சொன்ன ரகசியம்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் இரு பெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருவரும் துருவங்களாக வலம் வருகின்றனர்.இருவருக்கும் இடையே தொழில் ரீதியாக என்னதான் போட்டியிருந்தாலும் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்பதை பலர் சொல்லி கேட்டிருக்கிறோம்.

இந்த நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு அளித்த பேட்டி ஒன்றில் அஜித் விஜயை எப்படி கூப்பிடுவார் என்பது குறித்து பேசி உள்ளார்.அதாவது, மங்காத்தா படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் திரையரங்கில் ஒரு பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும். அப்போது வெங்கட் பிரபு எந்த பாடலை போடலாம் என யோசித்துக்கொண்டிருக்கும் போது அஜித் தான்,


 நம்ப தம்பி விஜய் பட பாடலை போடுங்க என கூறினார் என வெங்கட் பிரபு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.அதன் பின்னரே அந்த காட்சியில் விஜயின் காவலன் பட பாடலை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.


மேலும் அண்மையில் அஜித்தின் அப்பா இறந்த போது கூட விஜய் நேரில் சென்று அஞ்சலி தெரிவித்திருந்தார். தற்பொழுது விஜய் சூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகின்றார். அஜித் பைக் டூருக்கு கிளம்பி சென்று விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement