• Jul 25 2025

அசீமின் பிக்பாஸ் டைட்டில் பறி போகுமா? ஜோ மைக்கேல் பிரவீன் எடுத்த அதிரடி முடிவு!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகராக இருந்த அசீம் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக வாகை சூடியினார்.

மேலும், பிக்பாஸ் இறுதிப்போட்டியில் ஷிவின், விக்ரமன் ஆகிய பிற இரண்டு போட்டியாளர்களும் பிக்பாஸ் பைனலுக்கு தகுதியாகி இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

பெண்களை அழகிப் போட்டிக்கு தயார் செய்யும் பயிற்சி நிறுவனத்தை நடத்திவரும் ஜோ மைக்கேல் பிரவீன் தான் இந்த வாக்குகளின் எண்ணிகைப் பற்றியும் மேலதிக தகவல்களையும் கோரியிருக்கிறார். குறித்த மனுவில்,“பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்ப பிசிசிசி மூலம் முறையாக சான்றிதழ் பெற்றுள்ளதா?, பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவை ஒளிபரப்ப தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதா? பிக் பாஸ் நிகழ்ச்சி மீது ஏதேனும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா?

பிக் பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோவின் சீசன் 1 முதல் சீசன் 6 வரை பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளின் விவரங்களை வழங்கவும். பிக்பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோ சீசன் 6ல் பங்கேற்கும் போட்டியாளர்கள் எந்த அடிப்படையில் ஒவ்வொரு வார இறுதியிலும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்?பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ சீசன் 6-ன் விதிமுறைகள் மற்றும் விதிமுறைகள் சரியாக பதிவு செய்யப்பட்டதா? மேலும், அசீம் பெற்ற வாக்குகள் எத்தனை? அவர் எதனடிப்படையில் வெற்றிப் பெற்றார் என்ற பல கேள்விகளை முன்வைத்து மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்துக்கு மனு ஒன்றை அனுப்பிவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement