• Jul 23 2025

எதிர் நீச்சல் ஜீவானந்தம் கேரக்டர் சீரியலில் இருந்து விலகப்போகின்றாரா?- உண்மையைச் சொன்ன பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரைகளில் சன்டிவி, விஜய் டிவி, ஷுதமிழ் என்பன ரசிகர்களைக் கவரும் விதமாக பல ரியாலிட்ரி ஷோக்கள் மற்றும் சீரியல்கள் என்பனவற்றை ஒளிபரப்பாக்கி வருகின்றது. இதிலும் சன்டிவி சீரியல்கள் டிஆர்பியும் முன்னணியில் நிற்கின்றது.

அவ்வாறு சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியல் ரசிகர்களால் கொண்டாடப்படும் தொடராக எதிர்நீச்சல் அமைந்துள்ளது. காரணம் விறுவிறுப்பான கதைக்களம் மற்றும் காட்சி அமைப்புகளும் தான்.


 இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் திருமணத்திற்குப் பின்னர் ஆணாதிக்கம் கொண்ட கணவர்களால் மனைவிகள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

இந்த சீரியலில் இப்போது சொத்து பிரச்சனை பற்றி தான் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது,குணசேகரனின் சொத்து முழுவதையும் ஜுவானந்தம் என்பவர் தன்னுடைய பெயரில் மாற்றிவிட்டார்.இதனால் ஜீவானந்தம் யார் என்பதும் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.


அண்மையில் ஒரு பேட்டியில் திருச்செல்வம் பேசும்போது, ஜீவானந்தம் கேரக்டர் கொஞ்ச நாளைக்கு என்பது போன்று தான் தொடங்கப்பட்டது. ஆனால் இப்போது கதையின் முக்கியத்துவத்திற்கு தகுந்தது போல் கதை நகர்கிறது.

இனி கதை எப்படி செல்கிறதோ, ரசிகர்கள் எந்த அளவிற்கு வரவேற்பு கொடுக்கிறார்கள் என்பதை பொறுத்தே கதாபாத்திரம் இருக்கும். ஆனால் மிகவும் அதிக நாட்கள் ஜீவானந்தம் கதாபாத்திரம் இருக்காது என்று கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement