• Jul 25 2025

கோபத்தில் பொங்கி எழுந்த விஜய்... பயத்தின் உச்சத்தில் காவேரி... நடைபெறுமா இவர்களின் திருமணம்... விறுவிறுப்பாக வெளியான மகாநதி ப்ரோமோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் மகாநதி. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.


 நர்மதாவின் ஆப்பிரேஷனுக்கான வைத்திருந்த பணம் எக்கவுண்டில் இருந்து திருடி விட்டதால் நர்மதாவின் ஆப்பிரேஷனுக்காக பணத்திற்கு என்ன செய்வதென்று தெரியாமல்  தவித்த காவேரி விஜயிடம் உதவி கேட்கிறாள். தன்னை திருமணம் செய்து கொண்டால் பணம் தருவதாக விஜய் கூறவும் நர்மதாவிற்காக ஒத்துக்கொள்கிறாள். 


இப்படியே கதைநகர விஜயின் பாட்டி, தாத்தா காவேரியை பொண்ணு கேட்கும் போது காவேரி வீட்டில் ஒத்துக்கொள்ள மறுக்கின்றனர். இதனால் கோபமடைந்த விஜய் காவேரியை தனிமையில் சந்தித்து எனக்கு வாக்கு கொடுத்த மாதிரி கல்யாணம் நடக்கணும் , வார சண்டே நமக்கு கல்யாணம், முடியாதுனு சொன்ன தொலைச்சிருவன்என்று மிரட்டல் விடுகிறார் இதனால் காவேரி பயந்து விடுகிறாள்.


காவேரி மற்றும் விஜயின் கல்யாணம் நடைபெறுமா? இந்த விடையம் வீட்டுக்கு தெரிய வருமா என்று பொறுத்திருந்து பார்ப்போம். 



 

Advertisement

Advertisement