• Jul 26 2025

இதே முகூர்த்தத்தில் கயல் கழுத்தில் தாலி கட்டியே தீருவேன்... சபதம் எடுத்த எழில்... சிக்கலில் கயலின் தம்பி... எழில்-கயல் திருமணம் நடைபெறுமா..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் அடுத்தடுத்து விறுவிறுப்பான கட்டங்கள் நடந்து வரும் நிலையில், தற்போது திடீர் திருப்பமாக மற்றுமோர் விடயம் வெளியாகி இருக்கின்றது. அதாவது நாளை தனக்கும் ஆர்த்திக்கும் திருமணம் நடைபெற குறித்த அதே நேரத்தில் நான் கயல் கழுத்தில் தாலி கட்டுவேன் என்று எழில் பேசிக் கொண்டிருக்கிறார். அதை கேட்ட கயல் மனம் நெகிழ்ந்து போய் கண்ணீருடன் நிற்கிறார். 


மறுபுறம் எழில் இவ்வாறு கூறிக் கொண்டிருக்கும் சமயத்தில் அந்த இடத்திற்கு வரும் ஒரு சில ரவுடிகள் சிலர் கயிலின் தம்பியை அடித்துக் கொண்டு போகின்றனர். இப்போது ஏன் என்ன நடந்தது? எதற்காக இவனை அடித்து அழைத்துப் போகிறீர்கள் என கயல் கேட்க பணத்தை வாங்கிக் கொண்டு இவன் திருப்பி தரவே இல்லை எனவே பணத்தை கொடுக்குமாறு கூறி கயலின் தம்பியை மண்டபத்திலேயே அடித்து துவைத்து புதிதாக பிரச்சனையை கிளப்பி இருக்கின்றனர். 


இவ்வாறு புதிய பிரச்சினை ஒன்று துளிர் விட்டுள்ளதால் எழில் மற்றும் கயலின் திருமணம் நடைபெறுமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. 


Advertisement

Advertisement