• Jul 24 2025

சீதா ராமம் பாகம் 2 வருமா? - நடிக மிருணாள் தாக்கூர் என்ன சொன்னாரு தெரியுமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசிகர்களின் இதயத்தைத் தொட்ட ஒரு உன்னதமான காதல் கதை சீதா ராமம் திரைப்படம். ஹனு ராகவபுடி இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்து இருந்தார்.மிருணாள் தாக்கூர் நாயகியாக நடித்து உள்ளார். 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வசூலை அள்ளியது. மாஸ் ஆக்ஷன் படங்கள் மட்டுமின்றி கிளாஸ் படங்களும் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பதை மீண்டும் ஒருமுறை சீதா ராமம் படம் நிரூபித்தது.

வைஜெயந்தி மூவிஸ் பேனரில் தயாரிப்பாளர் அஸ்வனிதத் தயாரித்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இந்தப் படத்தின் மூலம் துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாக்கூருக்கு ரசிகர் பட்டாளம் எகிறின. இருவரும் இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தனர்.

இந்தப் படத்துக்குப் பிறகு மிருணாளுக்கு அதிக பட வாய்ப்புகள் வந்ததாகத் தெரிகிறது. இவர்கள் இருவரும் மீண்டும் புதிய படத்தில் இணைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் தனது ரசிகர்களுடன் மிருணாள் தாக்கூர் ட்விட்டரில் பேசினார். அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு தனக்கே உரிய பாணியில் பதில் அளித்து வந்தார்.

ஒருவர் சீதா ராமம் 2 பற்றி ரசிகரிடம் கேள்வி கேட்டார். அதற்கு அவர், "எனக்கு உண்மையில் எந்த யோசனையும் இல்லை. ஆனால் நானும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்" என்றார். 

இந்த காவியமான காதல் கதையின் தொடர்ச்சியில் அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.


Advertisement

Advertisement