• Jul 24 2025

சிவகார்த்திகேயனுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த சூரி... தொடர்ந்து பயணிப்பார்களா?

ammu / 2 years ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் சிறுவர் முதல் பெரியவர் வரை மிகவும் விரும்பும் ஒரு நடிகர். தமிழ் படங்கள் பலவற்றில் நடித்திருக்கிறார். இவரின் சிரிப்பாலோ என்னவோ எல்லோருக்கும் இவரை பிடிக்கிறது. 


இவரின் பல படங்கள் வெற்றியை சூடி கொண்டுள்ளது. இவர் விஜய் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தே நடிகரானவர். இவர் மெரினா, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், டான், இன்னும் பல படங்களில் நடித்துள்ளார்.


சிவகார்த்திகேயனும் சூரியும் இணைந்து பல படங்கள் நடித்துள்ளனர். காமெடி என்றாலே இவர்கள் இருவரும் தான் என்றும் கூறும் அளவிற்கு பின்னி எடுப்பார்கள். திரையில் மட்டுமல்ல சொந்த வாழ்க்கையிலும் இவர்கள் இருவருக்கும் அண்டர்ஸ்டாண்டிங் நிறையவே இருக்கு என்றே சொல்லலாம். 


இருவரும் அண்ணன் தம்பியாகவே பழகி வருகின்றனர். இவ்வாறு இருக்க இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் ஆகும். இதற்கு சூரி நேரில் சென்று சிவகார்த்திகேயனை வாழ்த்திய புகைப்படம் ஒன்று சிவாவின் இன்ஸ்டாவில் வெளியாகி உள்ளது. 


இதில் சூரி "கடின உழைப்பாளி, அருமையான கலைஞன், சிறந்த மனிதன், அன்பு தம்பி சிவகார்த்திகேயனிற்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! ஆத்தா மீனாட்சி துணை எப்பவும் உங்களுக்கு இருக்கும் தம்பி, என் பிராத்தனைகள்! தொடர்ந்து பயணிப்போம்" இவ்வாறு கூறியிருந்தார். 


Advertisement

Advertisement