• Jul 24 2025

இந்த விஷயம் வெளியில தெரிஞ்சிடுச்சா?-ஷிவினோட ஹேஷ்டாக்ஸ் கேட்டு வெக்கப்பட்டு சிரித்த விக்ரமன்

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியானது இன்னும் சில நாட்களில் முடிவடையப் போகின்றது. இதனால் யார் டைட்டில் வின்னர் ஆவார்கள் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில், வீட்டிற்கு கெஸ்ட் வந்து கொண்டு இருக்கின்றார்கள். நேற்றைய தினம் விஜே பார்வதி மற்றும் விஜே ஷோபனா ஆகியோர் வந்திருக்கின்றனர். போட்டியாளர்களுடன் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், ஷிவின் அங்கு வருகிறார்.


முன்னதாக, ஒவ்வொரு போட்டியாளரையும் விஜே இருவரும் நேர்காணல் செய்கின்றனர். அப்போது அவரைப்பற்றி சமூக ஊடகங்களில் ட்ரெண்டில் இருக்கும் ஹேஷ்டாக்குகள் என்ன என்பது சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ஷிவின் கார்டன் பகுதிக்கு வருகிறார். அங்கு பார்வதி மற்றும் போட்டியாளர்கள் அமர்ந்து உள்ளனர். அப்போது, ஷிவினுக்கு வழங்கப்பட்ட ஹேஷ்டாக்ஸ் பற்றி போட்டியாளர்கள் கேட்கின்றனர். இதற்கு பதில் அளிக்கும் ஷிவின்,"ஷிவின் சுப்ரீமஸி (Shivin Supremacy) மற்றும் பவர் கப்பிள் விக்கு அன்ட் ஷிவின் (power couple viku and shivin)" எனச் சொல்லி சிரிக்கிறார்.

இதனை கேட்டு விக்ரமன் முகத்தை மூடியபடி சிரிக்க, சக போட்டியாளர்கள் ஆராவாரம் செய்கின்றனர். அப்போது அசீம்,"ஓ, இதெல்லாம் வெளில வைரலாகுற ஹேஷ்டாக்ஸ் போல. இந்த விஷயம் வெளியுலகத்துக்கும் தெரிஞ்சிடுச்சா" என சிரிக்கிறார். இதனை கேட்டு சக போட்டியாளர்களும் சிரிக்கின்றனர்.



Advertisement

Advertisement