• Jul 25 2025

வெறும் 4நாட்களில் பல கோடி வசூலை வாரிக்குவித்த 'யாத்திசை'.. பொன்னியின் செல்வனை முறியடிக்குமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தரணி ராஜேந்திரன் இயக்கத்தில், சக்தி மித்ரன், சேயோன், ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சமர், ஜமீல், சுபத்ரா, வைதேகி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படமே 'யாத்திசை'. பல கோடி பட்ஜெட்டில் உருவாகி 'பொன்னியின் செல்வன்' போன்ற படங்கள் வசூலை வாரிக் குவித்து வந்த இந்த நேரத்தில், குறைவான பட்ஜெட்டிலும் வரலாற்று படங்களை தரமாக சொல்ல முடியும் என்கிற முயற்சியை இப்படத்தின் வாயிலாக மேற்கொண்டுள்ளார் இயக்குநர் தரணி ராசேந்திரன்.


அந்தவகையில் பாண்டிய மன்னனான ரணதீரனுக்கும், எயினர்களுக்கும் இடையேயான போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் தான் யாத்திசை. ரிலீசுக்கு முன் அப்படக்குழு வெளியிட்ட டிரைலர், டீசர் முதல் ஸ்னீக் பீக் வீடியோ வரை அனைத்துமே ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த வண்ணம் இருந்தன. 

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாகவே படமும் அமைந்திருந்தது. அதாவது கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசான யாத்திசை திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.


இந்நிலையில் ரசிகர்களின் அமோக வரவேற்பால் யாத்திசை படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் முதல் நாளில் ரூ. 37 லட்சம் வசூலித்த இப்படம், இரண்டாம் நாளில் 50 லட்சம், மூன்றாம் நாளில் 80 லட்சம் என தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது.

இதனையடுத்து தற்போது இப்படம் வெளியாகி 4 நாட்கள் முடிவில் உலகளவில் ரூ.2 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் முறியடிக்குமா என்பதை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement