• Jul 26 2025

நீங்களும் அரசியலுக்கு வருவீர்களா? சூப்பர் பதிலளித்த நடிகர் விஜய்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் தற்போது அரசியலில் நுழைய ஆர்வம் காட்டி வருவதாக பரவலாக பேச்சு அடிபடுகிறது. அதன் வெளிப்பாடாக கடந்தாண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு வெற்றிகண்டனர். அவர்களை நடிகர் விஜய் நேரில் அழைத்தும் பாராட்டினார். எனினும் அதேபோல் அண்மையில் அம்பேத்கர் பிறந்தநாளுக்கு அனைத்து மாவட்ட மக்கள் இயக்க நிர்வாகிகளும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தார் விஜய்.


மேலும் இப்படி விஜய் தற்போது படிப்படியாக தனது அரசியல் நகர்வை முன்னெடுத்து வரும் இந்த வேளையில், அவரின் பழைய பேட்டி ஒன்று  தீயாய் பரவி வருகிறது. அதில் சினிமாவில் இருந்து நிறைய பேர் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள், எதிர்காலத்தில் நீங்களும் அரசியலுக்கு வருவீர்களா? என விஜய்யிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு தனக்கு அரசியல் என்றால் என்னவென்றே தெரியாது என்றும் விஜய் சொல்லுவது மட்டுமின்றி, கண்டிப்பா அரசியலுக்கு வரமாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

அதேபோல் அதில் தன்னை மிகவும் பாதித்த சம்பவம் குறித்தும் மனம்திறந்து பேசி உள்ளார் விஜய். அதன்படி தனது தங்கை வித்யா இறந்தது தான் தன்னை மிகவும் பாதித்த சம்பவம் எனக் கூறிய விஜய், என் தங்கையை புதைக்கவில்லை, விதைத்திருக்கிறோம் என நெகிழ்ச்சியுடன்  தெரிவித்தார். அதேபோல் தனக்கு மிகவும் சந்தோஷமான நாள் எது என்பது குறித்து பேசுகையில், தன்னுடைய முதல் படமான நாளைய தீர்ப்பு ரிலீஸ் ஆன 1992-ம் ஆண்டு டிசம்பர் 2-ந் தேதி தான் என கூறினார்.


எனினும் இதுதவிர நடிகர் விஜயகாந்த் குறித்தும் அந்த பேட்டியில் விஜய் பேசி உள்ளார். விஜயகாந்த் என்னுடைய சொந்த அண்ணன் மாதிரி என கூறிய விஜய், நான் இப்படி சொல்ற மாதிரி தான் விஜயகாந்தும் எங்கு சென்று பேசினாலும் என்னை சொந்த தம்பி என சொல்வார். இதையடுத்து மீண்டும் விஜயகாந்துடன் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த விஜய், கண்டிப்பா சான்ஸ் கெடச்சதுனா ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணுவோம் என தெரிவித்தார். விஜய்யும், விஜயகாந்தும் செந்தூரப்பாண்டி படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement