• Jul 24 2025

''பெண்கள் ஈகோவை விட்டுக்கல்லாம்: ஆனா சுய மரியாதையை விட்டுக்கொடுக்க கூடாது''..நடிகை குஷ்பு ஓபன் டாக்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த டாப் நடிகைகளில் ஒருவர் குஷ்பூ. இவர் 80ஸ்,90ஸ் காலகட்டங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில்  நடித்துள்ளார். நடிகை குஷ்பு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போதுவரை ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் அவர் வெள்ளித்திரையில் மட்டுமின்றி சின்னத்திரை சீரியலிலும் நடித்துள்ளார். தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

மேலும்,அரசியலுக்குள் நுழைந்த குஷ்பு காங்கிரசை தொடர்ந்து பா.ஜ.கவில் இணைந்தார். அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர் தேசிய மகளிர் நல ஆணைய உறுப்பினராகவும் சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் SRM கல்லூரியில் மகளிர் தினம் அன்று ''பெண்கள் ஈகோவை விட்டுக்கல்லாம்,ஆனால் எந்த சூழ்நிலையிலும் சுய மரியாதையை விட்டுக்கொடுக்க கூடாது என்று கூறி இருந்தார்.

Advertisement

Advertisement