• Jul 24 2025

காதல் சர்ச்சைக்கு மத்தியில் யாஷிகா வெளியிட்ட கவர்ச்சி வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். அதுமட்டுமல்லாது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுடார்.


இந்நிகழ்ச்சியின் மூலம் அவர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து யாஷிகாவிற்கு பல படவாய்ப்புகள் குவிந்தன. அந்தவகையில் தற்போது இவர் 'சில நொடிகளில்' என்ற படத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷியுடன் இணைந்து நடித்து வருகின்றார்.


இப்படத்தினை, கன்னட இயக்குநர் வினய் பரத்வாஜ் என்பவர் இயக்குகிறார். அத்தோடு முரளி மனோகர் தயாரிக்கிறார். இப்படத்திற்காக ரிச்சர்ட் ரிஷி மற்றும் யாஷிகா இருவரும் எடுத்த நெருக்கமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி காதல் சர்ச்சைகளை கிளப்பி இருந்தன.


இதனையடுத்து இரு தரப்பில் இருந்தும் அது உண்மை அல்ல வதந்தி எனக் கூறியுள்ளனர். இந்நிலையில் தற்போது யாஷிகா கிளாமர் உடையணிந்து கவர்ச்சி வீடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கின்றார். அதனைப் பார்த்த ரசிகர்கள் அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement