• Jul 24 2025

சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டில் யோகிபாபு.. அதுவும் எங்கு தெரியுமா.. வைரலாகும் புகைப்படங்கள்.!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் யோகிபாபு. இவர் தற்போது அதிக படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். காமெடி நடிகனாக மட்டுமல்லாது கதாநாயகனாக நடிக்கவும் வாய்ப்புகள் குவிகின்றன. அதுமட்டுமல்லாது ஒரு காலத்தில் அவரை ஒதுக்கியவர்கள் இப்போது கால்ஷீட் கேட்டு பின்னால் அலைகிறார்கள்.


இந்த நிலையில் இன்றைய தினம் மகா சிவராத்திரியை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு பூஜை மற்றும் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் இரவு 7 மணிக்கு தொடங்கிய சிறப்பு யாக கால பூஜைகள் விடிய விடிய அதிகாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக 9 திரவியங்களால் அங்குள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடுகள் நடத்தப்படுகிறது. 


தற்போது யோகிபாபுவும் காரைக்காலுக்கு வருகை தந்து காரைக்காலில் உள்ள ஸ்ரீ தர்பானேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு சாமி தரிசனம் செய்து இருக்கின்றார். அங்கு வந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.


மேலும் காரைக்காலில் தர்பானேஸ்வரர் ஆலயத்தில் யோகி பாபு சாமி தரிசனம் செய்கிறார் என்ற செய்தி வெளியானவுடன் அவரது ரசிகர்கள் ஏராளமானோர் கோவிலுக்கு முன் குவிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement