• Jul 24 2025

யோவ் பிரதீப் நீ நல்லா இருப்பியா - லவ்டுடே பட இயக்குநரை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்- அடடே இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

கோமாளி பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி, ஹீரோவாக நடித்திருக்கும்  திரைப்படம் தான் லவ் டுடே. இப்படம் கடந்த சில நாட்களுக்கு முதல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.அத்தோடு வசூலிலும் அள்ளிக் குவித்து வருகின்றது.

மேலும் இந்தப் படத்தின் இயக்குநர் காதலனும், காதலியும் செல்போன்களை ஒரு நாள் மாற்றிக்கொள்ளும் புது ஐடியாவை கொடுத்திருக்கிறார். இதனால் இந்தப் படத்தை பார்த்த 90ஸ் கிட்ஸுகளோ, யோவ் பிரதீப் நீ நல்லா இருப்பியா. எங்களுக்கு ஏற்கனவே பொண்ணு கிடைக்கவில்லை. 


இதில் இப்படி ஒரு வில்லங்க ஐடியாவை கொடுத்து எங்களின் கல்யாண கனவை நாசமாக்கிவிட்டீரே என திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.இதற்கிடையே லவ் டுடே படம் பார்த்த மனைவிமார்களோ, ஏங்க நாமும் செல்போன்களை ஒரு நாள் மாற்றிக் கொள்வோமா என்று கணவன்களிடம் கேட்டு அவர்களுக்கு மினி ஹார்ட் அட்டாக் வர வைத்த சம்பவம் எல்லாம் நடந்திருக்கிறது.


அத்தோடு நேற்று பிறந்த 2கே கிட்ஸுகளுக்கு எல்லாம் திருமணம் நடக்கிறது. காதலி இருக்கிறார்கள். ஆனால் எங்களுக்கு வயசு மட்டும் ஏறிக் கொண்டே போகிறதே தவிர ஒரு பொண்ணு கூட கிடைப்பது இல்லை என்று 90ஸ் கிட்ஸுகள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement