• Jul 25 2025

என் வாழ்க்கையில் புதிய காற்றின் சுவாசம் நீங்கள்- எதிர் நீச்சல் சீரியல் நடிகை கனிகாவின் கணவரைப் பார்த்திருக்கின்றீர்களா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகையாக மட்டுமல்லாது டப்பிங் ஆட்டிஸ்டாகவும் வலம் வருபவர் தான் கனிகா. இவர் மணிரத்னம் இயக்கத்தில் பிரசன்னா நடிப்பில் வெளியான 5 ஸ்டார்ஸ் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார்.இதனை அடுத்து மலையாளம் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வந்தார்.


தமிழில் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சரியானதொரு இடத்தைப் பிடிக்க முடியவில்லை. இருப்பினும் டப்பிங் ஆட்டிஸ்டாக பல படங்களில் பணியாற்றி வருகின்றார். இது தவிர சன்டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் சீரியலிலும் நடித்து வருகின்றார்.


எதிர் நீச்சல் சீரியலில் இவர் நடித்து வரும் ஈஸ்வரி கதாப்பாத்திரத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. இந்த நிலையில் இவர் தன்னுடைய கணவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்து ஓர் பதிவினை போட்டுள்ளார்.


அதில் என் வாழ்க்கையில் புதிய காற்றின் சுவாசம் நீங்கள்.ஒரு அற்புதமான மகன், அன்பான நண்பன், அக்கறையுள்ள சகோதரன், அற்புதமான அப்பா மற்றும் புரிந்துகொள்ளும் கணவனாக இருந்து,அந்த ஆற்றல், அன்பு மற்றும் வெறித்தனம் அனைத்தையும் எங்கள் வாழ்க்கையை நிரப்பியதற்கு நன்றி என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement