• Jul 25 2025

"நீங்க ஆல்ரெடி அப்படி தான் இருக்கிறீங்க- சீரியஸாக பேசிய அசீமை பங்கமாகக் கலாய்த்த ஜனனி

stella / 2 years ago

Advertisement

Listen News!

இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் நீதிமன்றம் என்னும் டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. இதில் சக போட்டியாளர்கள் மீது தங்களுக்கு தோன்றும் குற்றங்களை முன் வைத்து அதை வழக்காக பதிவு செய்ய வேண்டும்.இதற்காக வழக்கறிஞர் ஒருவரை தேர்வு செய்து, அனைத்து போட்டியாளர்களாலும் தேர்வு செய்யப்படும் நீதிபதி முன்பு வைத்து வாதாடி அதில் ஜெயிக்க வேண்டும் என்பது தான் இந்த டாஸ்க்.

இதில் பல போட்டியாளர்கள் வைத்த வழக்கு தொடர்பாக நடந்த வாதம், அதிக விறுவிறுப்பை ஏற்படுத்தி இருந்தது. பல வழக்குகளில் எதிர்பாராத வகையில் தீர்ப்பு கிடைத்திருந்த நிலையில், சில வழக்குகள் சற்று வேடிக்கையாக சென்று கொண்டிருந்தது.இந்த டாஸ்க்கின் இறுதியில் ராபர்ட் மாஸ்டர் மற்றும் குயின்சி ஆகியோர் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தர்கள். 


 அதே போல, வார இறுதியும் வந்து விட்டதால் இந்த வார எலிமினேஷன் குறித்தும் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இப்படி ஒரு சூழலில், போட்டியாளர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, அசீம் கருத்துக்கு ஜனனி சொன்ன விஷயம், அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


அமுதவாணன், ஜனனி, தனலட்சுமி, அசீம் உள்ளிட்டோர் இரவு நேரத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பேசும் அசீம், "எனக்கு இப்போ Interest இல்ல" என கூறியதும் "எதுக்கு?" என அமுதவாணன் கேட்கிறார். "இப்போ தலைவர் ஆக interest இல்ல" என அசீம் கூறிய மறுகணமே, "நீங்க ஆல்ரெடி அப்படி தான் இருக்கீங்க. நீங்க எங்க தலைவர் சொல்றத எல்லாம் கேட்டுட்டு பண்றீங்க" என சிரித்துக் கொண்டே ஜனனி கூறுகிறார்.இதனைக் கேட்டு மற்றவர்களும் சிரிப்பதைக் காணலாம்.

Advertisement

Advertisement