• Jul 26 2025

நீங்க அட்டகத்தி ஸ்ரோங் பிளேயர் இல்லை- அசீமிடம் அடிக்கடி மோதும் விக்ரமன்- வில்லத்தனமான ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 21 போட்டியாளர்கள் கலந்துக்கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு நபர் எலிமினேட் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். 

இதனைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதன்படி ஆதிவாசிகள் மற்றும் ஏலியன்ஸ் என இரண்டு அணிகளாகப் பிரிந்து ஹவுஸ்மேட்ஸ் விளையாடி வந்தனர். இப்பொது அந்த டாஸ்க் முடிவடைந்துள்ளது.

இதனை அடுத்து பெஸ்ட் பொஃபோமர் மற்றும் வேஸ்ட் பொஃபோமருக்கான தெரிவு நடந்தது. அதில் அசீம் அமுதவாணனை தான் அடித்ததை விக்ரமன் பார்த்ததாக கூறி சண்டை பிடித்தார்.அவர் என்னை ஸ்ரோங் போட்டியாளராக நினைப்பதாக கூறியிருந்தார்.

இதனால் கடுப்பான விக்ரமன் எழும்பி நீங்க அட்டகத்தி ஸ்ரோங் பிளேயர் இல்லை எனக் கூறியுள்ளார். இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.


Advertisement

Advertisement