• Jul 24 2025

சூப்பர் ஸ்டாருக்கெல்லாம் சூப்பர் ஸ்டார் நீங்க தான் - ரஜினி பிறந்தநாளில் வித்தியாசமாக வாழ்த்திய பாலிவூட் பிரபலம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் தான் நடிகர் ஷாருக்கான். இவர் தற்போது அட்லி இயக்கத்தில் ஜவான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருவதோடு அனிரூத் இப்படத்திற்கு இசையமைக்கின்றார்.

இது தவிர ஷாருகான் நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு திரைப்படம் தான்  பதான். இப்படம் வரும் ஜனவரி மாதம் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது.இப்படத்தினை யஸ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பதோடு கதாநாயகியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார்.


இந்த நிலையில், இன்று தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்தின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு ஷாருக்கான் தன் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

அதில், கூலான, எளிமையான எப்போதும் சூப்பர் ஸ்டாருக்கெல்லாம் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்திற்கு பிறந்த நாள் வாழ்த்துகள். உங்களை விரும்புகிறேன்…நீங்கள் மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.இவரைத் தவிர இன்னும் பல பிரபலங்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement