• Jul 25 2025

குடும்ப விஷயத்த மீடியாவிற்கு கொண்டு போறீங்களே.. அசிங்கமா இல்லையா?... சம்யுக்தாவை வெளுத்துவாங்கிய ரீஹானா..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பகல் நிலவு என்ற சீரியல் மூலம் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகி அதன் பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடி தான் விஷ்ணுகாந்த், சம்யுக்தா.கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் ஒரே மாதத்தில் பிரிந்து ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், சன் தொலைக்காட்சியில் ஆனந்தராகம் சீரியலில் தற்போது பிஸியாக இருப்பவர் ரீஹானா. அதிரடியாக பல கருத்துக்களை துணிந்து சொல்லக்கூடியவரான இவர், சம்யுக்தா, விஷ்ணுகாந்த் இடையே நடந்து வரும் பிரச்சனை குறித்து பேசி உள்ளார். அதில், விஷ்ணுகாந்த்க்கு ஆதரவு தெரிவித்து நான் இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டு இருந்தேன் அதைப்பார்த்துவிட்டு பலர் என்னை கடுமையான வார்த்தையால் திட்டினார்கள்.

நான், விஷ்ணுகாந்த்துடன் பணியாற்றி இருக்கிறேன் அவரை பற்றி எனக்கு முழுசாக தெரியாது என்றாலும் ஓரளவுக்கு அவர் பற்றி தெரியும் என்பதால், அவருக்கு ஆதரவாக பேசினேன் இதற்காக என்னை திட்டுவது எந்த வகையில் நியாயம். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் அவர்கள் இருவருமே இந்த பிரச்சனையை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்

குடும்ப சண்டையை மீடியாவிற்கு முன் கொண்டு வந்து கணவர் செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார் என்கிறார். அதுவும் அப்பா, அம்மா முன் பேச தயங்கும் விஷயத்தை கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் பார்ப்பவர்களின் முகம் சுளிக்கும் வகையில் பேசி இருக்கிறார். ரவி, ஹரி தவறாக நடந்து கொண்டார்கள் என்று சொல்லும் சம்யுக்தா, விஷ்ணுகாந்த் கணவராகிவிட்டதால், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார் என்று கூறுகிறார். பின் எதற்கு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தன் மீது தவறு எதுவும் இல்லை என்பதை நிரூபிக்க வீடியோவில் பேசியும், இன்டர்வியூ கொடுத்து இருக்கிறார். இப்படி இருவரும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தால், மக்களுக்கு இவர்கள் மீது வெறுப்புத்தான் வரும். குடும்ப பிரச்சனையை குடும்பத்தினருடன் சேர்ந்து பேசி தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர மீடியாவில் விஷ்ணுகாந்த்தை அசிங்கப்படுத்துவது சரியா என நடிகை ரீஹானா பேட்டி அளித்துள்ளார்.


Advertisement

Advertisement