• Jul 25 2025

படித்தால் மட்டுமே நிஜத்தில் ஹீரோவாக இருப்பீங்க, தயவு செய்து படிச்சிடுங்க- கல்வி குறித்து ஓபனாகப் பேசிய தனுஷ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமல்லாது  இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகத்திறன் கொண்டவராகவும் இருக்கின்றார்.இவர் தற்பொழுது இயக்குநர் அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற பிரமாண்டமான படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு எலாம் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.இதனை அடுத்து தன்னுடைய 50வது படத்தை தானே இயக்கி நடித்து வருகின்றார்.இப்படமானது அடுத்த ஆண்டு வெளியாகும் என்று நம்பப்படுகின்றது. இந்த நிலையில் தனுஷ பற்றிய தகவல் வைரலாகி வருகின்றது.


அதாவது தனுஷ் சினிமாவிற்கு வந்த புதிதில் ஆங்கிலம் சரளமாகப் பேசமாட்டார். ஆனால் இப்போது  பல மொழிகளில் சரளமாக பேசி வருகின்றார். மேலும் பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்டுவிட்டு தனுஷ் நடிக்க வந்ததால் அவரால் படிப்பை தொடரமுடியாமல் போனது. எனவே தனுஷ் தன்னால் பட்டப்படிப்பு படிக்க முடியவில்லை என பல நாள் நினைத்து வருந்தியுள்ளாராம் . 

நட்சத்திர ஹோட்டல் மற்றும் நிகழ்ச்சிகள் என செல்லும்போது பலர் ஆங்கிலத்தில் பேசுவார்களாம். ஆனால் தனுஷால் ஆங்கிலத்தில் பேசமுடியாமல் நிற்பாராம்.இதையடுத்து அவர் படிக்கவில்லை என ஒரு சிலர் சொல்லியும் காட்டுவார்களாம். இதனை தனுஷ் பல பேட்டிகளில் கூறியுள்ளார். மேலும் ரசிகர்ளிடம் தயவுசெய்து அட்லிஸ்ட் ஒரு டிகிரியாவது படிச்சிடுங்க என பல பேட்டிகளில் கூறியுள்ளார்.


 இதைப்போல தனுஷ் ஒரு நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் கலந்துரையாடுவார். அப்போது அவர் பேசும்போது, படங்களில் ஹீரோக்கள் சிலர் படிக்காமல் இருப்பார்கள். ஆனால் நிஜத்தில் படித்தால் தான் ஹீரோ.எனவே நன்கு படியுங்கள் என அந்த குழந்தைகளுக்கு அட்வைஸ் செய்துள்ளார் . இவ்வாறு தனுஷ் பல இடங்களில் படிப்பை பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் பேசியுள்ளார். 

அவர் நடிப்பில் வெளியான அசுரன் படத்தில் மட்டும் தனுஷ் படிப்பின் முக்கியத்துவத்தை பற்றி பேசவில்லை. நிஜத்திலும் பல முறை பாடிப்பின் முக்கியத்துவத்தை பற்றி பேசியுள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement