• Jul 24 2025

Suicide பண்ணனும் என்று நினைக்கிற உங்களால் வாழவும் முடியும்.. விஜய் ஆண்டனி மகள் இறப்பிற்காக வருந்தும் ரொபேர்ட் மாஸ்டர்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் ஆண்டனி மகள் மீரா அவர்களின் இறப்பினைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி குடும்பத்தினருக்கு நிறைய பேர் நேரில் சென்றும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் ஆறுதலினைத் தெரிவித்திருந்தார்கள். அந்தவகையில் தற்போது பிக்பாஸ் பிரபலமும் டான்ஸ் மாஸ்டருமான ரொபேர்ட் அவர்களும் தனது ஆறுதலினைத் தெரிவித்துக் கொள்வதோடு மட்டுமில்லாமல் இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றினையும் வெளியிட்டிருக்கின்றார். 


அதில் அவர் கூறுகையில் "விஜய் ஆண்டனி சார் மகளோட இறப்பு ரொம்ப பெரிய இழப்புத்தான், படம் சம்பந்தமான விஷயமா இருந்தால் சொல்லி கூல் பண்ணலாம், ஆனால் இந்த இழப்பு ரொம்ப கஷ்டமாகத்தான் இருக்கும்" என்றார்.


மேலும் "தற்கொலை செய்யும் தைரியம் யாருக்கும் பொதுவாக வராது, அப்படி சூசைட் பண்ணுற அளவு யோசிக்கிறிங்க என்றால் அந்த பிரச்சினைய அழகா அப்பா, அம்மாகிட்ட சொல்லி சரிபண்ணலாம் . உங்களுக்கு பிரச்சினை இருந்த பேரண்ஸ், பிரண்ட்ஸ், அல்லது உங்க டீச்சர் யாரிடம் சரி ஷேர் பண்ணுங்க" எனவும் கூறியுள்ளார்.


அதுமட்டுமல்லாது "சூசைட் பண்ணுறளவு யோசிக்கிற உங்களுக்கு வாழவும் முடியும். தயவு செய்து யாரும் இந்தமாதிரி தற்கொலை செய்ய யோசிக்க வேணாம். விஜய் ஆண்டனி சார் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" எனவும் அந்த வீடியோவில் தெரிவித்திருக்கின்றார்.

Advertisement

Advertisement