• Jul 26 2025

நீங்க தான் அதைப் பண்றீங்க- வீல் சேரில் வந்த தொகுப்பாளினி டிடிக்கு வாய்ப்பு கொடுத்த பிரபல நடிகர்-

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அடுத்த வாரம் கிராண்ட் பினாலே நிகழ இருப்பதால், டைட்டில் வின்னர் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றர்.இதனால் இந்த வாரம் முழுவதும் இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அதிலும் டிடி என்ட்ரி கொடுத்து ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருத்தரையும் ஊக்கப்படுத்தி இருந்தார்.ஆனால் அவர் இரண்டு ஸ்டிக்குகளுடன் நடக்க முடியாமல் ஊனிக் கொண்டே வருவதை பார்த்த ரசிகர்கள் பலரும் கலங்கினார்கள். மேலும் பல வருடங்களாக தொகுப்பாளராக இருக்கும் டிடி காலில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு இருப்பதால், அவரால் நீண்ட நேரம் நிற்க முடியாது என்றும் கூறியிருந்தார்.


இதனால் சமீப காலமாகவே தொகுப்பாளராக பணி புரிவதை குறைத்துக் கொண்டிருக்கும் டிடி, பெரிய ஸ்டார் ஆடியோ லான்ச் ஒன்றில் ஸ்டிக் உடன் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். முதலில் அந்த வாய்ப்பு தனக்கு கிடைக்காது என நினைத்துக் கொண்டிருக்கையில், அவர்தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் என உலக நாயகன் கமல்ஹாசன் பரிந்துரைத்திருக்கிறார்.

அதிலும் நாற்காலியில் அமர்ந்து கொண்டு தான் அந்த ப்ரோக்ராமை செய்தேன் என்றும் அது விக்ரம் ஆடியோ லான்ச் என்றும் டிடி உருக்கத்துடன் பகிர்ந்து கொண்டார். அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் உலகநாயகன் கமல்ஹாசன் ஒவ்வொரு கலைஞர்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ளும் நபர்.


அவரால்தான் தனக்கு விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் மிகப்பெரிய பட்ஜெட் படங்களின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது என்று உருக்கமாக பேசினார். இதைப் பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் ஆண்டவரை சோசியல் மீடியாவில் புகழ்ந்து தள்ளுகின்றனர்.

Advertisement

Advertisement