• Jul 25 2025

நல்ல படத்திற்கு புரமோஷன் தேவையில்லை என்று சொன்னீங்களே.. இது என்ன சார்.. அஜித்தை விளாசும் நெட்டிசன்ஸ்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோ என்றால் அது நடிகர் அஜித் தான். இவர் நடிப்பில் தற்போது 61-ஆவது படமான 'துணிவு' உருவாகியிருக்கின்றது. இப்படத்தை எச்.வினோத் வித்தியாசமான கதையம்சத்துடன் நிறைந்ததாக இயக்கி உள்ளார். 


அந்தவகையில் எச்.வினோத் அஜித்தை வைத்து இவர் இயக்கும் மூன்றாவது படம் இதுவாகும். இதற்கு முன் இவர்கள் கூட்டணியில் 'நேர்கொண்ட பார்வை' மற்றும் 'வலிமை' ஆகிய திரைப்படங்கள் வெளியாகி இருந்தன. இந்த இரண்டு படங்களையும் தயாரித்த போனி கபூர் தான் துணிவு படத்தையும் தற்போது தயாரித்துள்ளார்.

மேலும் துணிவு திரைப்படமானது வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீசாக உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் படத்தின் புரமோஷன் பணிகளும் மும்முரமாக சூடுபிடிக்க தொடங்கி உள்ளன. 


இன்னொரு முக்கிய விடயம் என்னவெனில் வழக்கம்போல் இந்த படத்தின் புரமோஷனிலும் தான் கலந்துகொள்ள மாட்டேன் என்பதை திட்டவட்டமாக ஏற்கெனவே அறிவித்துவிட்டார் நடிகர் அஜித்குமார். அதுமட்டுமின்றி, ‘ஒரு நல்ல படத்துக்கு புரமோஷனே தேவையில்லை. அதற்கான புரமோஷனை அதுவே செய்துகொள்ளும்’ என்று தனது மேலாளர் வாயிலாக அறிக்கையெல்லாம் தாறுமாறாக வெளியிட்டு இருந்தார். 


இவரின் இந்த பதிவு தான் தற்போது அதிகமாக நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. ஏனெனில் நேற்று துணிவு படத்திற்காக துபாயில் ஸ்கை டைவிங் செய்து புரமோஷன் செய்யப்பட்ட வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ஒரு நல்ல படத்துக்கு புரமோஷனே தேவையில்லனு சொல்லீட்டு பறந்து பறந்து புரமோஷன் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. அப்போ துணிவு நல்ல படம் இல்லையா? என கிண்டலாக கேள்வி எழுப்பி வருகின்றனர். 


அத்தோடு மறுபுறம் அஜித்தின் மேலாளர் பதிவிட்ட டுவிட்டை குறிப்பிட்டு மீம்ஸ்களும் போடப்பட்டு வருகின்றன. இதுக்கே இப்படி ட்ரோல் செய்தால், இப்படத்தின் டிரைலரை துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா மற்றும் நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கம் ஆகிய இடங்களில் பிரமாண்டமாக திரையிட உள்ளார்களாம். அதுவும் வருகிற டிசம்பர் 31-ந் தேதி டிரைலர் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது நெட்டிசன்கள் என்னவெல்லாம் செய்யப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement