• Jul 23 2025

லியோ பார்க்கச் சென்று தமது சட்டைகளை கழட்டிவீசிய இளைஞர்கள்! கேரளாவில் வெறியாட்டம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் தற்போது உலகளவில் வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வருகிறது.

'லியோ' படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், கெளதம் மேனன், பிரியா ஆனந்த், அர்ஜுன், சாண்டி, மிஸ்கின், ஜார்ஜ் மரியம் உள்ளிட்ட பல வலிமையான நடிகர்கள் நடித்துள்ளனர். 

லியோ படத்தை திரையரங்குகளில் பார்த்துவரும் ரசிகர்கள் செம்மையாக படம் உள்ளதென என்ஜாயாய் சொல்லி வருகின்றனர். 

முக்கியமாக கைதியில் போலீஸ் கேரக்டரில் நடித்த ஜார்ஜ் மரியான், அதே நெப்போலியனாக என்ட்ரி கொடுக்கும் குறித்த சீனில் தியேட்டரை அதிர வைத்துள்ளனர் தளபதி பிரியர்கள்.

பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் லியோ படம் தமிழகத்தில் இன்று காலை 9 மணிக்கு வெளியானது. அதற்கு முன்னதாக அதிகாலை 4 மணிமணிக்கே கேரளாவில் வெளியானது. 

இவ்வாறான நிலையில் கேரளாவில் திரையிடப்பட்ட லியோ படத்தின் முதல் காட்சியை காண ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் என கொண்டாடி வந்துள்ளதோடு, படத்தை பார்த்த பெரும் மகிழ்ச்சியில் தமது ஆடைகளை கழட்டி எரிந்து தமது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் தமிழக கேரளா எல்லைப்பகுதியில்  ஒரு சில இடங்களில் தமிழிலும் லியோ படம் வெளியாகியுள்ளது. 

இதேவேளை, லியோ படத்திற்கு நல்ல விமர்சனம் குவிந்து வரும் நிலையில், இலங்கை பெண் ஜனனி நடித்திருக்கும் காட்சியை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றமை மேலும் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement