• Jul 25 2025

உங்க பாய்பிரண்ட் கியூட்டாக சிரிக்கிறாரு- என்னது விக்ரமன் தான் ஷிவினின் பாய்பிரண்டா?- ஜனனி கூறிய புதிய தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 6வது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து மகேஷ்வரி வெளியேற்றப்பட்டார்.

இதனை அடுத்து தற்பொழுது 16 போட்டியாளர்களே வீட்டிற்குள் உள்ளனர். அதன்படி இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர், ஜனனி, நிவாஷினி, தனலட்சுமி, அசீம், ஆயிஷா ஆகியோரது பெயர்கள்  நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இதனால் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகமாகக் காணப்படுகின்றது. இந்த நிலையில் தற்பொழுது வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

அதாவது ஜனனியும் அமுதவாணனும் பேசிட்டு இருக்கும் போது ஷிவின் போய் குழப்புகின்றார். இதனால் ஜனனி ஷிவினைப் பார்த்து உங்க பாய்பிரண்ட் நல்லா சிரிக்கிறாரு என விக்ரமனைப் பார்த்து கூறுகின்றார். இதனால் ஷிவின் அவர் எனக்கு பாய்பிரண்ட் இல்ல அண்ணா என்று கூறி நக்கலாகப் பேசுவதையும் காணலாம்.


Advertisement

Advertisement