• Jul 25 2025

உங்கள் இழப்பு ஈடு செய்ய முடியாதது.. கோவை குணாவின் மரணத்திற்கு மதுரை முத்து இரங்கல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கோவை குணா. இவர் கடந்த சில வாரங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையை மருத்துவர்கள் அளித்துவந்திருந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை கோவை குணா உயிரிழந்தார்.


இந்நிலையில் தற்போது பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனும், கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியின் நடுவருமான மதுரை முத்து கோவை குணா மரணத்திற்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் "20 ஆண்டுகளில் எத்தனையோ கலைஞர்களை பார்த்துவிட்டேன் நீங்கள்தான் நம்பர் ஒன். இன்னும் எத்தனை பல குரல் கலைஞர்கள் வந்தாலும் கோவை குணாவிற்கு நிகராகாது. 


இவரும் நானும் கலக்கப்போவது யாரு பாகம் ஒன்றில் வெற்றியாளராக வந்தாலும். இவர் எல்லா கலைஞர்களையும் உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பார். என் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர் . உங்கள் இழப்பு ஈடு செய்ய முடியாதது. இளநீரைப் போன்று தூய்மையான அன்பிற்கு உகந்த மனிதர் உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்" என பதிவிட்டுள்ளார். 


மேலும் மதுரை முத்துவும், கோவை குணாவும் நெருங்கிய நண்பர்கள் என்பதனால் கோவை குணாவின் இறுதி சடங்கில் மதுரை முத்து நேரில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement