• Jul 25 2025

Youth Icon விருது வென்ற தனுஷ்... 40வயதில் இப்படி ஒரு சாதனையா... குவியும் பாராட்டுக்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

திரைத்துறையில் திறமையும் கடின உழைப்பும் இருந்தால் போதும், சாதாரண மனிதன் கூட சாதிக்கலாம் என நிரூபித்த பலருள் ஒருவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிக்க வந்த புதிதில் பல அவமானங்களை சந்தித்திருக்கின்றார். அந்த தடைகளை எல்லாம் படிக் கற்களாக மாற்றி இன்று உச்ச நட்சத்திரமாக உயர்ந்து நிற்கின்றார்.


ஏராளமான விருதுகளை வென்ற தனுஷிற்கு தற்போது மற்றுமோர் அங்கீகாரம் கிடைத்துள்ளது.  அதாவது 2023ம் ஆண்டின் CII தக்ஷின் மாநாட்டில் Youth Icon விருது தனுஷிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை வாங்கிய தனுஷ் தொடர்ந்து பேசுகையில் "நான் என் திரைப்பயணத்தை துவங்கியபோது இவ்வளவு தூரம் வருவேன் என எதிர்பார்க்கவே இல்லை. அதே போல 40 வயதாகும் நான் யூத் ஐகான் விருதை வாங்குவேன் என்றும் எதிர்பார்க்கவில்லை" என கூறியுள்ளார். 


இதைத்தொடர்ந்து திரைபிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் தனுஷிற்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement