• Jul 26 2025

இலங்கை வந்தடைந்த ஜீ தமிழ் பிரபலங்கள்...தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் முக்கிய இடம் வகிக்கிறது ஜீ தமிழ்.இந்த தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


 இவ்வாறுஇருக்கையில்  "சூப்பர் ஜோடி”  என்ற புத்தம் புதிய நிகழ்ச்சி  தற்போது ஒளிபரப்பாகி வைரலாகி வருகின்றது.இதில் பிரபலங்கள், சாதாரண சாமானிய மக்கள், மாற்று திறனாளிகள் என பலதரப்பட்ட 10 ஜோடிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளனர்.


இதில் நிஜ கணவர் மற்றும் அவரது மனைவி என கலந்து கொண்டு அவர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அந்த நிகழ்ச்சியில் கூறி வருகின்றனர்.இவ்வாறு பல போட்டிகளுடன் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.


இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கும் சில ஜோடிகள் இலங்கை சென்றுள்ளனர். அதாவது நவீன் - கிருஷ்ணகுமாரி,அமர்தீப் - தேஜஸ்வினி, செல்வகுமார் - சின்னப்பொண்ணு ,கென்னி செபாஸ்டியன் - ஷன்மதி என்பர்களே வந்துள்ளனர்.


அந்த புகைப்படங்களை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.இதனை KPY நவீனும் உறுதி செய்துள்ளார்.



Advertisement

Advertisement