• Jul 24 2025

12 வயதில் திரைப்படம் இயக்கி மாஸ் காட்டிய பள்ளி மாணவி : ஷாக்கில் இயக்குநர்கள்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தற்போதைய  கால கட் டத்தில்  சினிமா துறை எத்தனையோ பரிமாணங்களை கடந்து அசுர வேகத்தில் வளர்ந்துவருகிறது. இதற்கெல்லாம் முதல்படியே படத்தின் கதையே. கதை நன்றாக இருந்தால் மட்டுமே மக்களின் கவனத்தை ஈர்க்க முடியும். 

ஒரு அருமையான கதையை கொடுப்பது என்பது இந்த காலத்தில் அசாத்தியமான ஒன்றாகிவிட்டது. இப்படி போட்டிப்போட்டுக் கொண்டு படங்களை எடுத்து தள்ளிக்கொண்டிருக்கும் சினிமா கலைஞர்களுக்கு இடையே, ஒரு 12 வயது பள்ளி மாணவி அனிமேஷம் திரைப்படத்தை இயக்கி மாஸ் காட்டிவருகிறார்.

பி.கே.அகஸ்தி என்ற மாணவர் 'குண்டான் சட்டி' எனும் அனிமேஷம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். கொரோனா காலத்தில் அதிகமான புத்தங்கள் படித்து அதனால் தூண்டப்பட்டு இந்த திரைப்படத்தை எடுத்துள்ளதாக இப்படத்தின் இளம் இயக்குநர் பி.கே.அகஸ்தி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. 

 இதன் டிரெய்லரை இயக்குநர்கள் பேரரசு மற்றும் ஆர்.வி.உதயகுமார் வெளியிட்டனர். இந்த சிறுமியின் முயற்சிக்கு மக்களிடத்தில் எம்மாதிரியான வரவேற்பை பெற்று தரும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 


Advertisement

Advertisement