• Jul 24 2025

நம் மனதை கொள்ளையடித்த 'கன்னத்தில் முத்தமிட்டால்'... இத்தனை ஆண்டுகள் கடந்து விட்டதா?

ammu / 2 years ago

Advertisement

Listen News!

2002 ஆம் ஆண்டு வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம், நடிகர் மாதவன், நடிகை சிம்ரன் மற்றும் பேபி கீர்த்தனா நடித்து இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ஒரு தமிழ் படம் ஆகும். மேலும் இதில் நந்திதா தாஸ், ஜே. டி. சக்ரவர்த்தி, பிரகாஷ் ராஜ் மற்றும் பசுபதி ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் 6 தேசிய திரைப்பட விருது மற்றும் பல சர்வதேச திரைப்பட விழாவை பெற்றது நம் எல்லாருக்கும் தெரிந்த ஒன்றே. இந்த படம் சுஜாதா ரங்கராஜன் எழுதிய "அமுதவம் அவனம்" என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது. பின்னணி இசை மற்றும் ஒலிப்பதிவு ஏ.ஆர். ரஹ்மான் கையாண்டார், ​​ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவை கையாண்டார்.


 தமிழில் மட்டுமில்லாமல் இந்த படம் தெலுங்கில் அம்ருதா என்று டப்பிங் செய்யப்பட்டது. மலையாளத்திலும் அதே தலைப்பில் பெயரிடப்பட்டது.


இந்த திரைப்படம் உலக அளவில் பிரசித்தி பெற்று அனைவரது மனதிலும் பெரும் பங்கு வகித்து நின்றது. இந்நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இப்படம் இன்றுவரை நம் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement