• Jul 26 2025

12-ஆவது வருட டேட்டிங் நாள் - காதல் சொட்ட சொட்ட கொண்டாடிய நகுல் - ஸ்ருதி! வைரல் வீடியோ இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' திரைப்படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் நடிகர் நகுல். பாய்ஸ் திரைப்படத்திற்குப் பிறகு தனது உடல் எடையை வெகுவாகக் குறைத்து ஒரு ஹீரோ அந்தஸ்திற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு, ’காதலில் விழுந்தேன்’, ’மாசிலாமணி’ என அடுத்தடுத்து பல படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். 

நடிகர் நகுல் தனது நீண்ட நாள் தோழியான ஸ்ருதி பாஸ்கரனை 2016ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியினருக்கு அழகான ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. 

காண்போர் மகிழும் திருமண வாழ்க்கையில் பயணித்து வரும் இந்தத் தம்பதியினர் தங்களது 12ஆவது ஆண்டு டேட்டிங் நாளை முன்னதாகக் கொண்டாடியுள்ளனர். 

இந்நிலையில் தாங்கள் டேட்டிங் செய்யத் தொடங்கிய நாள்  முதல் இன்று வரை தங்களது அழகான புகைப்படங்கள் கொண்ட ஒரு வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ருதி பதிவிட்டுள்ளார். 

இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement