• Jul 25 2025

25 வருடத்திற்கு பின் மீண்டும் அந்த விஷயத்தை செய்யப்போகும் ஜோதிகா...வெளியானது தகவல்.!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. இவர் நடிப்பில் கடைசியாக உடன்பிறப்பே எனும் திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்தது.

இதன்பின்னர் இவர் நடித்து வரும் திரைப்படம் தான் காதல் தி கோர்.அத்தோடு  இப்படத்தில் மம்மூட்டி கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.


எனினும் இதை தொடர்ந்து பாலிவுட் பக்கம் நடிகை ஜோதிகா கவனம் செலுத்தி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. 25 ஆண்டுகளுக்கு பின் பாலிவுட் பக்க ஜோதிகா சென்றுள்ளார்.

ஏற்கனவே ஸ்ரீ எனும் இந்தி படத்தில் நடித்து முடித்துள்ள நடிகை ஜோதிகா மீண்டும் ஒரு புதிய இந்தி படத்தை கமிட் செய்துள்ளாராம்.


இப்படத்தில் மாதவன் மற்றும் அஜய் தேவ்கன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். குயின் படத்தை இயக்கிய இயக்குனர் விகாஸ் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

Advertisement

Advertisement