• Jul 24 2025

40 வயதான நடிகருடன் 13 வயது நடிகை ரொமான்ஸ்.! மனம் திறந்த பிரபல நடிகை!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை மீனா. இவர் 80 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்தார் என்றே சொல்லாலாம்.

இந்த நிலையில் நடிகை மீனா அவர்கள் சமீபத்தில் ஒரு ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கிறார் அப்போது தான் 13 வயது இருக்கும் போது 40 வயது நடிகருடன் ஜோடியாக நடித்தது இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் அது மட்டுமல்லாமல் அந்த படத்தில் நடித்தது குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை கூறியிருக்கிறார்.

அதாவது இந்த பேட்டியில் , 1990 ஆம் ஆண்டு வெளியான என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் நடிக்கும் போது எனக்கு 13 வயது தான் ஆனது அது மட்டுமல்லாமல் சோலையம்மா கதாபாத்திரம் என்பதே எனக்கு தெரியாது மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளர், நடிகர் யார் என்ற விவரமும் எனக்கு தெரியாது.ஆனால் அப்போது எந்த விஷயம் சொன்னாலும் போல்டாக எடுத்துக் கொள்வேன் ஆகையால் இந்த கதாபாத்திரத்தை நான் தேர்ந்தெடுத்தேன் ஆனால் என்னை சுற்றி இருக்கும் நண்பர்கள் அதில் நடிக்க வேண்டாம் என்று கூறினார்கள் ஆனால் அதையும் தாண்டி அந்த படத்தில் நடித்தேன் என்று கூறியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் நடிக்கும் போது எனக்கு வயது 13 அது மட்டும் இல்லாமல் அந்த படத்தில் கதாநாயகனாக நடித்த ராஜ்கிரன் சாருக்கு 40 வயது ஆகியிருந்தது என்று கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement