• Jul 23 2025

வழி நெடுக காட்டுமல்லி எனக்கா பூத்தது காட்டுக்குள்ள..விடுதலை படத்தின் பாடல் ரிலீஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விடுதலை படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. மார்ச் மாதம் 31ம் திகதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.மேலும் நேற்றைய தினம் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடந்தது.

இந்நிலையில் விடுதலை படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்டுமல்லி பாடலின் லிரிக் வீடியோ இன்று வெளியாகியிருக்கிறது. முதல் பாடல் போலவே இந்தப் பாடலின் லிரிக் வீடியோவிலும் வரிகள் தமிழிலேயே கொடுக்கப்பட்டுள்ளன. பாடலை இளையராஜாவே எழுதி பாடியிருக்கிறார். அவருடன் அநன்யா பஃட் பாடியிருக்கிறார். 


 சென்னையில் நடைபெற்ற விடுதலை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய இளையராஜா, "வெற்றிமாறன் மிகச்சிறந்த இயக்குநர். நான் இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறேன். அப்படி என்றால் 1500 இயக்குநர்களூடன் பணி புரிந்திருக்கிறேன் என்று அர்த்தம். அந்த அனுபவத்தில் சொல்கிறேன் வெற்றிமாறன் நிச்சயம் அற்புதமான இயக்குநர்.

விடுதலை படம் இதுவரை நிகழாத கதைக்களத்தில் உருவாகியிருக்கிறது. எனவே இதுவரை கேட்காத சவுண்டை நீங்கள் இந்தப் படத்தில் கேட்கலாம்" என பேசியிருந்தார். இளையராஜா இதுவரை எந்த இயக்குநரையும், ஒரு திரைப்படத்தையும் இவ்வளவு புகழ்ந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement