• Jul 24 2025

21வயதுப் பாடகரால் 13வயது சிறுமிக்கு நேர்ந்த அவலம்... மனவேதனையில் பெற்றோர்... நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

போஜ்புரி சேர்ந்த பிரபலமான இளம் பாடகர் தான் அபிஷேக் எனும் பபுல் பிஹாரி. 21 வயதான இவர் 13வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில் இவர் தனது வீட்டின் அருகே வசித்து வந்த குறித்த பெண்ணுடன் கடந்த 2 ஆண்டுகளாக நட்புடன் பழகி வந்திருந்தார்.

ஒருநாள் அந்த சிறுமியை தனது அறைக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். அதுமட்டுமன்றி இந்த விஷயம் குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டி அந்த சிறுமியின் ஆபாச போட்டோக்களை எடுத்தார். இந்த போட்டோக்களின் மூலமாக ஆன்லைனில் அந்தப் பாடகர் பணம் சம்பாதித்தும் வந்திருந்தார். 


ஆரம்பத்தில் இந்த சிறுமி யாரிடமும் சொல்லாத நிலையில், தமது மகளின் ஆபாச போட்டோக்கள் வெளியான விஷயம் தெரியவர பின்னர் தங்களின் மகளுக்கு நிகழ்ந்த அநியாயம் குறித்து அறிந்து கொள்கின்றனர். 

இதனையடுத்து உடனடியாக காவல் நிலையத்தில் புகாரும் அளித்தனர். இந்நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அந்த பாடகர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எது எவ்வாறாயினும் ஒரு இளம் பாடகரால் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளமை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement