• Jul 25 2025

அனுமனுக்கு தியேட்டரில் சீட்டு ஒதுக்கிய காரணம் இதுதான்.. சீக்ரெட்டை உடைத்த இயக்குநர் - ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடி வசூலா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய திரை உலகில் ஒவ்வொரு காலகட்டங்களிலும் ராமாயணத்தை அடிப்படையாக எடுக்கப்படும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஓம்ராவத் இயக்கத்தில் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி இருக்கும் ஆதி புருஷ் என்ற படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி  சமூகவலைத்தளங்களில் வைரலானது.

இந்த நிலையில் வரும் ஜூன் 16ஆம் தேதி ரிலீஸ் ஆகும் ஆதி புருஷ் படத்திற்கு உலகெங்கும் இருக்கும் தியேட்டர்களில் அனுமனுக்கு என்று ஒரு சீட்டு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதற்கான சீக்ரெட் என்ன என்பதை தற்போது இயக்குநர் உருக்கமாக பகிர்ந்திருக்கிறார். 

தற்போது திருப்பதியில் ஆதி புருஷ் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடத்தப்பட்டது.இதில் பேசிய இயக்குநர் ஓம்ராவத், ‘சிறுவயதிலிருந்தே எங்கு ராமாயண நாடகம் நடக்கிறதோ, அங்கு அனுமனே நேரில் வந்து பார்ப்பார். அதற்காகவே ஒவ்வொரு நாடகத்திலும் ஒரு தனியாக சேர் போடப்படும். அதில் அனுமன் வந்து உட்கார்ந்து பார்ப்பார் என்ற ஐதீகம் பின்பற்றப்பட்டது என்று அம்மா சொன்னார்கள். அதனால் தான் இப்போது ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் ஆதி புருஷ் படம் ரிலீஸ் ஆகும் ஒவ்வொரு தியேட்டரிலும் அனுமனுக்கு என்று ஒரு இருக்கை இருக்கும்படி தயாரிப்பாளர் தரப்பிலிருந்து விநியோகஸ்தரிடம் கேட்டுக் கொண்டோம்’ என நிகழ்ச்சியில் உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கி பேசினார்.

இந்த சீக்ரெட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது. ஏற்கனவே 500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்த படத்திற்கு சேட்டிலைட் உரிமைகள், இசை வெளியீட்டு உரிமைகள், டிஜிட்டல் உரிமைகள் என ஒட்டுமொத்தமாக திரையரங்கு அல்லாத வருவாய் மட்டும் 247 கோடிக்கு பிரீ பிசினஸ் ஆகியிருக்கிறது. அதுமட்டுமல்ல தெற்கில் 185 கோடி திரையரங்கு வருவாயிலிருந்து குறைந்தபட்ச உத்திரவாதமாக ஆதி புருஷ்க்கு கிடைத்திருக்கிறது.

இப்படி ஒட்டுமொத்தமாக ரிலீசுக்கு முன்பே ஆதி புருஷ் 432 கோடியை வாரி குவித்திருக்கிறது. மொத்த பட்ஜெட்டில் சுமார் 85 சதவீத பணத்தை இப்போதே வசூல் செய்திருக்கும் ஆதி புருஷுக்கு இன்னும் 15 சதவீதம் பணம் மட்டுமே வந்தால் போதும். மீதிம் வசூல் ஆகுவதெல்லாம் அவர்களது லாபம் தான். இந்த படம் அசால்ட் ஆக 1000 கோடியை அடித்து நொறுக்கும் என்றும் கணித்திருக்கின்றனர்.எனவே பொறுத்திருந்து பார்ப்போம், 


Advertisement

Advertisement