• Jul 25 2025

19வயது நடிகைக்கு நிச்சயதார்த்தம்... "நாங்க இந்த வயசிலும் சிங்கிளாக இருக்கோமே".. வயிற்றெரிச்சலில் புலம்பும் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சிறு வயதிலேயே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை மில்லி பாபி பிரவுன். இவர் Stranger Things வெப்தொடர் மூலம் ரசிகர்கள் பலரையும் தன் வசப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் 19 வயதாகும் நடிகை மில்லியும், பாடகர் ஜான் பான் ஜோவியின் மகன் நடிகர் ஜேக் பான்ஜியோவியும் ஒருவரையொருவர் காதலித்து வந்தார்கள். 


இதனையடுத்து தற்போது அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கையில் வைர மோதிரத்துடன் தான் ஜேக்குடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகை மில்லி. இவ்வாறாக தானும், மில்லியும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து தங்களுக்கு நிச்சயமானதை ஜேக்கும் ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார்.


இதனைத் தொடர்ந்து 'She is 19' என்கிற ஹேஷ்டேக் ஆனது ட்விட்டரில் செம டிரெண்டாகி வருகிறது. அதாவது அந்தக் ஹேஷ்டேகை பயன்படுத்தி "நடிகை மில்லிக்கு 19 வயசு தான் ஆகிறது. ஆனால் அதற்குள் அவருக்கு நிச்சயமாகிவிட்டது. ஆனால் நாங்கள் இத்தனை வயசு வந்தும் இன்னும் சிங்கிளாகவே இருக்கின்றோம்" எனக்கூறி ரசிகர்கள் பலரும் வயிற்று எரிச்சலில் புலம்பி வருகின்றார்கள்.



Advertisement

Advertisement