• Jul 24 2025

ஷாலினி மாற்ற சொன்னால் கூட அவர் அதை மாற்றிக் கொள்ளவே மாட்டார்- அஜித் குறித்து ஓபனாகப் பேசிய எதிர்நீச்சல் சீரியல் நடிகர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் எப்போதுமே மற்றவர்களுக்கு உதவுவதில் அதிக ஆர்வம் உடையவர். ஆனால், தான் செய்யும் எந்த உதவியும் வெளியே தெரியாதவாறு சீக்ரெட்டாக வைத்துக்கொள்வார். சில வருடங்களுக்குப் பிறகு தனது வீட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு சொந்தமாக வீடு கட்டிக் கொடுத்து நெகிழ வைத்திருந்தார். இதுபோல அவரால் உதவிப் பெற்றவர்கள் பலரும் சில நெகிழ்ச்சியான சம்பவங்களை கூறியுள்ளனர்.

அஜித்தின் இந்த உதவும் பண்பு குறித்து இயக்குநரும் எதிர்நீச்சல் சீரியல் நடிகருமான மாரிமுத்து ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார். பரியேறும் பெருமாள் உட்பட பல படங்களில் வில்லனாக நடித்துள்ள மாரிமுத்து, அஜித்தின் ஆரம்ப காலத்தில் அவருடன் நெருங்கி பழகியுள்ளார். இந்நிலையில், அஜித் பற்றிய பேசிய அவர், சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பு வைக்க தெரியாத நடிகர் அஜித். 


மேலும் அதிகமாக உதவிகள் செய்துகொண்டே இருப்பார் எனவும் கூறியுள்ளார். அஜித்தை ஆசை படத்தில் நடிக்கும் போது முன்பிருந்தே நடிகர் மாரிமுத்துக்கு தெரியுமாம். அப்போது வெறும் 25 ஆயிரம் சம்பளம் வாங்கினார். ஆனால், இப்போது 100 கோடி வரை சம்பளம் வாங்குகிறார், இருந்தாலும் அன்றைக்கும் இன்றைக்கும் அஜித்திடம் எந்த வேறுபாடும் இல்லை. இவ்வளவு சம்பளம் வாங்கும் அவர், இந்த பணத்தை சேமித்து வைக்கவோ அல்லது மறைத்து வைக்கவோ நினைத்ததே கிடையாது.


தன்னுடன் இருக்குறவங்க யாரா இருந்தாலும், அவர்கள் மீது அதிகமான கேர் எடுத்துக்கொள்ளும் சிறந்த மனம் படைத்தவர் தான் அஜித். இதெல்லாம் ஷாலினியை திருமணம் செய்த பின்னரும் கூட அவர் மாற்றிக்கவே இல்லை என்றுள்ளார் மாரிமுத்து. அதேபோல், ஷாலினியே இதையெல்லாம் மாற்றிக்கொள்ள வேண்டும் என சொன்னால் கூட அஜித் அதனை கேட்க மட்டார், ஏனென்றால் அவரது குணம் அப்படி என மாரிமுத்து கூறியுள்ளார். அஜித்தின் ஆசை, வாலி போன்ற படங்களில் மாரிமுத்துவும் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement