• Jul 26 2025

அறையில் 2000 பேர்.. அந்த மாதிரியான காட்சிகளின் போது அவர் எனக்கு உதவினார்.. பிரியங்கா சோப்ரா அதிரடிக் கருத்து..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா விஜய்யுடன் இணைந்து 'தமிழன்' திரைப்படத்தில் நடித்து அதன் மூலமாக தமிழ்த் திரையுலகிற்குள் அறிமுகமானார்.

இந்நிலையில் பிரியங்கா சோப்ராவின் சூடேற்றும் படுக்கையறை காட்சிகளுடன் உலகளாவிய புலனாய்வு தொடரான சிட்டாடல் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி முதல் அமேசான் பிரைமில் வெளியாக இருக்கின்றது. இந்த சிட்டாடல் தொடரில் பிரியங்கா சோப்ரா சக நடிகருடன் படுக்கையறை காட்சிகளில் மிகவும் கவர்ச்சியாக நடித்து உள்ளார். 


மேலும் சிட்டாடலின் இந்திய பதிப்பில் சமந்தாவும் நடித்து உள்ளார். அதுமட்டுமல்லாது இது போன்ற காட்சிகளில் அவரும் காணப்படுவார் என கூறப்படுகிறது. சமந்தா இதற்கு முன்பாக குடும்ப மனிதன் 2 படத்திலும் படுக்கையறை காட்சிகளில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இம்முறை அந்த காட்சிகள் சற்று அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் சிட்டாடல் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா நடிகர் ரிச்சர்ட் மேடனுடனான சூடேற்றும் படுக்கையறை காட்சிகள் குறித்து பல சுவாரசியமான கருத்துக்களை தெரிவித்து உள்ளார். 


அந்தவகையில் அவர் கூறுகையில் "உண்மையில் திரையில் பார்ப்பவர்கள் நாங்கள் அறையில் தனியாக இருப்போம் என நினைப்பார்கள் ஆனால் அந்த படப்பிடிப்பு அறையில் சுமார் 2,000 பேர் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. சிட்டாடல் தொடரில் படுக்கையறை காட்சிகளில் நான் நடித்துள்ளேன். 

அந்தக் காட்சிகளின் படப்பிடிப்பின் போது நானும் ரிச்சர்டும் ஒருவருக்கொருவர் பல நேரங்களில் உதவி உள்ளோம். சில சங்கடமான கோணங்களில் நடிக்க வேண்டியிருந்தது. அப்போது நாங்கள் மிகவும் அசவுகரியமாக உணர்ந்தோம். நான் அவரிடம் உங்கள் கையை அங்கே வைத்து மறையுங்கள் என்று கூறுவேன். அவர் என்னிடம் உன் கையை இங்கே வை' என்று கூறுவார். 


நாங்கள் உடல் உறுப்புகளை கேமராவில் காட்டாதவாறு கைகளால் மூடிக் கொண்டோம். இதனால் அழுத்தமில்லாமல் காட்சிகளை முடித்தோம்" என கூறியுள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா.

Advertisement

Advertisement