• Jul 25 2025

CWC இல் இருந்து மணிமேகலை வெளியேற உண்மைக் காரணம் இதுவா..? அடடே பக்காவாக பிளான் போட்டு விலகியிருக்காரே..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நிகழ்ச்சி தொகுப்பாளர், போட்டியாளர், யூடியூப் சேனல், சமூக வலைத்தளம் எனப் பன்முகத் திறமை கொண்டு எப்போதும் பிசியாக இருக்கும் மணிமேகலை சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பமான 'குக்வித் கோமாளி' சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்.


நிகழ்ச்சியின் இறுதிவரை அவரை அவர் வருவார் எனப் பலரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் தான் விலகுவதாக விலகுவதாக திடீரென அறிவித்திருந்தார். இதனையடுத்து அவர் விலகலுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வந்தன. 


சிலர் அவர் கர்ப்பமாக இருப்பதன் காரணமாகத் தான் இந்நிகழ்ச்சியில் இருந்து விலகியதாக கூறி வருகின்றனர். ஆனால் அது வெறும் வதந்தி எனவும் பின்னர் தெரிய வந்தது. மேலும் ஒரு சிலர் ஷிவாங்கி போட்டியாளராக களமிறங்கியதால் ஈகோ காரணமாகத் தான் வெளியேறினார் என்றனர்.


இந்நிலையில் தற்போது மற்றுமோர் காரணம் வெளியாகி இருக்கின்றது. அது என்னவென்றால் விஜய் தொலைக்காட்சியில் ஒரு புதிய ஷோ வரப்போகிறதாம், அதில் தொகுப்பாளினியாக களமிறங்கவே மணிமேகலை குக் வித் கோமாளி விட்டு விலகினார் எனக் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement