• Jul 26 2025

நடிகர் மகேஷ் பாபு குடும்பத்தில் ஒரே ஆண்டில் 3 பேர் மரணம்.!- அதிர்ச்சியில் திரையுலகம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான்  மகேஷ் பாபு . இவர் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிஸியான நடிகராக வலம் வருகின்றார்.இது ஒரு புறம் இருக்க மகேஷ்பாவுவின் வீட்டில் இந்த ஆண்டு மட்டும் மூன்று பேர் உயிரிழந்தள்ளதாக கூறப்படுகின்றது.

அதாவது இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடிகர் மகேஷ் பாபுவின் மூத்த சகோதரரும், நடிகருமான கட்டமனேனி ரமேஷ் பாபு 56 வயதில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே  இறப்புக்குள்ளானார்.தன் தந்தையோடு குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய இவர் பச்சை தோரணம், சாம்ராட், முக்குரு கொடுக்குலு, சின்னி கிருஷ்ணுடு, பஜார் ரவுடி, கரும்புலி, கலியுக அபிமாண்டியுடு ஆகிய படங்களில் நடித்திருந்தார்.


அதை அடுத்து நடிகரின் தாயார் இந்திரா தேவி வயது தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரும் உடல் நலக்குறைவு காரணமாக 28/09/2022 மரணம் அடைந்தார். 


இதனை அடுத்து அவரது தந்தை இன்று அதிகாலை 1.15 மணியளவில் மாரடைப்பால் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் நிலைமை மோசமாக இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் காலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்தள்ளார்.


ஒரே வருடத்தில் மூன்று இழப்புகளை சந்தித்துள்ள மகேஷ் பாபுவின் குடும்பம் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளது. அவருக்கு திரை உலகின் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement