• Jul 26 2025

3வது மனைவி 10 கோடி கேட்டு மிரட்டினார்.. என்னை கொலை செய்ய சதி.. பாதுகாப்பு கேட்ட நரேஷ் பாபு!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதி 10 கோடி கேட்டு மிரட்டியதாகவும், தன்னை கொலை செய்ய சதி திட்டம் தீட்டுவதாகவும் நடிகர் நரேஷ்பாபு நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

டோலிவுட் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரரான நரேஷ் பாபு ஏராளமான தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் நெஞ்சத்தை அள்ளித்தா, பொருத்தம், மாலினி 22 பாளையங்கோட்டை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் நரேஷ் பாபு, புத்தாண்டு அன்று நடிகை பவித்ரா லோகேஷை திருமணம் செய்து கொள்ள இருப்பமாக கூறி லிப் கிஸ் கொடுத்து வீடியோவை வெளியிட்டு உள்ளார்.



நடிகர் நரேஷ் பாபு மற்றும் நடிகை பவித்ரா லோகேஷ் இருவருமே கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். அத்தோடு இருவரும் ஒரே வீட்டில் லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகின்றனர். எனினும் இதையடுத்து, புத்தாண்டு கேன்டில் லைட் வெளிச்சத்துடன் ஒருவருக்கு ஒருவர் உதட்டில் முத்தம் கொடுத்துக்கொண்டு சோஷியல் மீடியாவில் பெரும் புயலை கிளப்பியது.

மேலும் இந்த விவகாரமான முத்த வீடியோவை பார்த்த விகே நரேஷின் 3வது மனைவியான ரம்யா ரகுபதி, 60 வயதான நரேஷிற்கு ஏற்கனவே மூன்று முறை திருமணமாகி ஒவ்வொருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது. இதில் முதல் இரண்டு மனைவிகளிடமிருந்து அவர் விவாகரத்து பெற்று என்னை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். எனக்கும் அவருக்கும் இன்னும் விவாகரத்து ஆகாத நிலையில் எப்படி நான்காவதாக திருமணம் செய்து கொள்ளமுடியும்.அத்தோடு  இந்த வயதில் நான்காவது திருமணம் கேட்குதா என கேட்டிருந்தார்.



நரேஷ் பாபு மற்றும் ரம்யா ரகுபதி விவாகரத்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில், நடிகர் நரேஷ் பாபு ஹைதராபாத் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளார். அதில், 2012ம் ஆண்டு அவரை திருமணம் செய்தேன் அப்போதிருந்தே இருவருக்கும் ஒத்துவரவில்லை. அத்தோடு, என் பெயரையும் என் குடும்பத்தின் பெயரை சொல்லி பல இடத்தில் லஞ்சக்கணக்கில் பணத்தை பலரிடம் கடனாக வாங்கினார். அந்த 10 லட்சம் கடனையும் நான் தான் அடைத்தேன்.


மேலும், விவாரத்து கொடுக்க வேண்டும் என்றால் 10 கோடி பணம் வேண்டும் என்று பணம் கேட்டு மிரட்டுவதாகவும், போலீஸ் அதிகாரி ஒருவரின் துணை உடன் எண் செல்போன் ஹேக் செய்யப்படுகிறது. பணம் மற்றும் சொத்துக்காக மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதி என்னை கொலை செய்யவும் திட்டமிட்டுள்ளதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், வெளியில் செல்லவே அச்சமாக இருப்பதாகவும், இதனால் உரிய பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தை நாடி உள்ளார் நரேஷ்பாபு.

Advertisement

Advertisement