• Jul 24 2025

52வயசு கிழவிடா..ஆபாச படம் அனுப்பிய ரசிகனுக்கு ஐஸ்வர்யா செய்த செயல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பழம் பெரும் நடிகை லட்சுமியின் மகளான ஐஸ்வர்யா தனது அம்மாவைப் போலவே தமிழ்,தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்துள்ளார். பாக்யராஜூடன் ராசுகுட்டி படத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்

 நடிகை ஐஸ்வர்யா படங்களில் நடித்து வந்தாலும் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில், சோப்பு மற்றும் பெண்கள் அழகு சாதனப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். தற்போது, இவர் வாட்ஸ் அப்பில் ஆபாச படம் அனுப்பி, படுமோசமான மெசேஜ் செய்த நெட்டிசன்களின் புகைப்படத்தை வீடியோவில் காட்டி காரி துப்பி உள்ளார்.

யூடியூப் சேனலில் ஆர்டரை பெறுவதற்காக வாட்ஸ் அப் நம்பரை போட்டதில் இருந்து தொடர்ந்து ஆபாச மெசேஜ் வந்துகொண்டே இருக்கிறது. இதில் சில ஆண்கள் மிகவும் ஆபாசமாக மெசேஜ் செய்கிறார்கள். இதுபற்றி வீடியோவில் பேசவேண்டாம் என்று நினைத்தேன். ஆனால், என் மகள் இதுபோன்று பிரச்சனை வந்தால் பெண்கள் முன்வந்து பேச வேண்டும். நீயே இப்படி அமைதியாக இருக்காதே என்றார். இதனால் தான் இந்த வீடியோவை பதிவிடுகிறேன் என்றார்.

இதில், ஸ்னார்க்கு ஜே, அகர மூர்த்தி, ரிச்சர்டு என்பவர்கள் படுமோசமாக மெசேஜ் அனுப்புகிறார்கள். நான் உன்ன வாங்களானு பார்த்தேன்...வயசு ஆனாலும் சும்மா கும்முனு இருக்க என்று தன்னுடைய அந்தரங்க உறுப்பை போட்டோ எடுத்து அனுப்பி உள்ளார். இதெல்லாம் உங்களுக்கு அசிங்கமா தெரியலயா, மெனோபாஸ் நின்ன 52 வயசு கிழவிடா நானு, இங்கே ஒன்னும் கிளாமர் ஆடலடா மானம் கெட்ட பசங்களா.

நான் சோப்புதான் விற்கிறேன், என்னை விற்கவில்லை, வாட்ஸ் அப் நம்பரிலேயே காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை என்று தெளிவா போட்டு இருக்கிறேன்.அதன் பிறகும் இரவு 11 மணிக்கு மெசேஜ் அனுப்பினால் என்ன அர்த்தம். யூடியூபில் வந்து சோப்பு விற்பதால், ஹாய் வானு சொல்லுவேனு நினைச்சியா என்று அந்தரங்க உறுப்பை புகைப்படம் எடுத்து அனுப்பியவரின் போட்டோவை வீடியோவில் காட்டி,இந்த பையனை பெற்ற புண்ணியவதியே நீயே பாரு என்று காரி துப்பினார்.

Advertisement

Advertisement