• Jul 25 2025

"செல்லம் ஐ லவ் யூ''... 19 ஆண்டுகளை கடந்த 'கில்லி'.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் எத்தனை படங்கள் நடித்திருந்தாலும் அவரை ஒரு தரமான ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றிய திரைப்படம் என்றால் அது 'கில்லி' தான். தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் இப்படமானது ஏப்ரல் 17 ஆம் தேதி 2004 ஆம் ஆண்டு வெளியானது.


மேலும் இந்த படம் ஆனது தெலுங்கில் மகேஷ் பாபு, பூமிகா மற்றும் பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான ஒக்கடு படத்தின் உடைய ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. ரீமேக் படமாக இருந்தாலும் தரமான கமர்ஷியல் படமாக உருவாகி மாபெரும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.


அதிலும் குறிப்பாக இந்த படத்தில் பிரகாஷ் ராஜ் நடித்த முத்துபாண்டி கதாபாத்திரமும் தாமு நடித்த ஓட்டேரி நரி கதாபாத்திரமும் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அதுமட்டுமல்லாது விஜய்யின் சுட்டித்தனமான நடிப்பும் அனைவராலும் ரசிக்கப்பட்டது.


இந்நிலையில் கில்லி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை தளபதி ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

Advertisement