• Jul 25 2025

பிரபல முன்னணி நடிகர்களின் குடும்பத்தில் ஏற்பட்ட சலசலப்பு- மனைவியின் உறவினரைத் தாக்கியதால் ஏற்பட்ட கைகலப்பு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரான மோகன் பாபுவுக்கு விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு மற்றும் லக்‌ஷ்மி மஞ்சு என மூன்று குழந்தைகள் உள்ளனர்.மூவரும் சினிமாவில் மிகப்பெரிய நடிகர்களாக வலம் வரும் நிலையில், திடீரென அண்ணனும் தம்பியும் இப்படி அடித்துக் கொள்வது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரஜினிகாந்த் உடன் இணைந்து 1995ம் ஆண்டு பெட்டாராயுடு படத்தில் நடித்த மோகன் பாபு ஏகப்பட்ட ஹிட் படங்களில் டோலிவுட்டில் நடித்து அசத்தி உள்ளார். 71 வயதாகும் மோகன் பாபு திருப்பதிக்கு சென்றிருந்த நேரத்தில் அவரது மகன்கள் இருவரும் அடித்துக் கொண்டது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.


சமீபத்தில் குடும்பத்தினர் சம்மதம் இல்லாமல் நடிகர் மனோஜ் மஞ்சு, பூமா மவுனிகா என்பவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார். அது அவரது சகோதரர் விஷ்ணு மஞ்சுவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. திருமணத்திலேயே மூன்றாம் நபர் போல கடைசி வரிசையில் பெயருக்காக கலந்து கொண்டதே பெரும் பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில், சமீபத்தில் மனோஜ் மஞ்சு வீட்டுக்கு விஷ்ணு மஞ்சு வந்திருக்கிறார். அப்போது பூமா மவுனிகாவின் உறவினர் அங்கே இருந்த நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பூமா மவுனிகாவின் உறவினரை போட்டு விஷ்ணு மஞ்சு வெளுத்து வாங்கி இருக்கிறார். அதனை வீடியோவாக எடுத்துப் போட்டு மனோஜ் மஞ்சு பாருங்க எங்க வீட்டுக்கு வந்த விருந்தாளியை எப்படி அடிக்கிறார் என மனோஜ் மஞ்சு சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளார்.


மனைவியின் உறவினரை விஷ்ணு மஞ்சு தாக்கிய நிலையில், மனோஜ் மஞ்சுவுக்கும் விஷ்ணு மஞ்சுவுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த சண்டையை சகோதரியான லக்‌ஷ்மி மஞ்சு தலையிட்டு சமரசம் செய்து இருப்பதாக கூறுகின்றனர். மேலும், மனோஜ் மஞ்சு ஷேர் செய்த அந்த வீடியோவையும் டெலிட் செய்துள்ளார். இது தொடர்பாக ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், வாழு.. வாழ விடு என பதில் அளித்திருக்கிறார் மனோஜ் மஞ்சு.


Advertisement

Advertisement