• Jul 26 2025

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை தீபிகாவின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? இதோ புகைப்படங்கள்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இந்த சீரியலில் தற்போது அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருக்க விறுவிறுப்பாக சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இந்த சீரியலில் முதலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் விஜே தீபிகா.இவர் தன்னுடைய முகத்தில் அதிகமான முகப்பரு இருந்த காரணத்தால் இந்த சீரியலில் இருந்து வெளியேறினார்.

அதன் பிறகு அவருக்கு பதிலாக சாய் காயத்ரி நடித்து வந்த நிலையில் சமீபத்தில் அவர் சீரியலில் இருந்து விலகினார்.அவருக்கு பதிலாக தற்போது மீண்டும் தீபிகா ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

பொதுவாகவே ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது சில காரணத்தால் அதிலிருந்து விலகி மீண்டும் அதே கதாபாத்திரத்தில் நடிப்பது என்பது சின்னத்திரை உலகில் மிகப்பெரிய விஷயம் தான்.

அப்படி ஒரு வாய்ப்பு தான் தீபிகாவிற்கு மீண்டும் கிடைத்துள்ளது. விஜேபாக இருந்து வந்த தீபிகா பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

சீரியலில் நடிப்பதை தாண்டி இவர் தனியாக யூடியூப் சேனலையும் நடத்தி வருகின்றார். இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் தீபிகாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் புகைப்படங்களை அதிக அளவு பகிர்ந்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement