• Jul 25 2025

நடிகை மீனாவை திருமணம் செய்ய பெண் கேட்ட பிரபல நடிகர் - வெளியானது தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மீனா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார்.

90களில் அதிக படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். அத்தோடு ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்ற மொழிகளில் வெளியான திரைப்படங்களிலும் நடித்திருந்தார். மேலும் இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.

அத்தோடு தெறி படத்தில் நைனிகா விஜய் மகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். கடந்த ஆண்டு மீனாவின் கணவர் உடல்நிலை குறைவால் காலமானார்.கணவரின் மறைவால் துக்கத்தில் இருந்த மீனா, அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டும் தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார். 

இதனிடையே நடிகை மீனா இரண்டாம் திருமணம் செய்ய போகிறார் என்று செய்திகள் அவ்வப்போது சோசியல் மீடியாவில்  பரவி வந்தது.

இந்த நிலையில் நடிகை மீனாவை திருமணம் செய்து கொள்வதற்காக மீனாவை பிரபல நடிகர் சரத்குமார் பெண் கேட்டுள்ளதாகவும், இதற்கு அவருடைய அம்மா மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தான் சம்மந்தம் கைவிடப்பட்டதாகவும் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.  


Advertisement

Advertisement