• Jul 25 2025

சிகிச்சை பலனின்றி பிரபல பாடகர் மரணம்... இரங்கல் தெரிவிக்கும் ரசிகர்கள்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இலங்கையின் புகழ் பெற்ற பாடகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வந்தவர் டோனி ஹசன். இவர் ஒரு புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் என்பதோடு, ஹிந்திப் பாடல்களைப் பாடும் ஆற்றல் காரணமாக அவர் இலங்கையர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வந்தார்.


இந்நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் டோனி ஹசன் சிகிச்சை பலனின்றி தன்னுடைய 73-ஆவது வயதில் இன்றைய தினம் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


இதனையடுத்து அவரது இறுதிக் கிரியைகள் இன்று (17) பி.ப. 5.00 மணியளவில் மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் இடம்பெறும் என அவரது குடும்பத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இவரின் மறைவிற்கு ரசிகர்கள் உட்படப் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement