• Jul 24 2025

கோர விபத்தில் சிக்கி காலை இழந்த பிரபல நடிகர்- முதல் படம் வெளியாக முதலே இந்த நிலமையா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஏ.ஸ்ரீனிவாஸின் மகனான சூரஜ் குமார், துருவன் என்ற பெயரை மாற்றிக் கொண்டு படங்களில் நடித்து வருகின்றார்.இவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா என்கிற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அனூப் ஆண்டனி இயக்கிய இப்படம் சில பிரச்சனையால் வெளியாகவில்லை.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று மைசூரில் இருந்து ஊட்டிக்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது, பேகுர் அருகே மைசூரு - குண்ட்லுபேட் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த டிராக்டரை முந்த முயன்றுள்ளார். அப்போது, பைக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தில் பலத்த காயமடைந்த துருவனை மீட்டு அருகில் இருந்த மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரது வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டு மொத்த எலும்பும் உடைந்து சிதைந்துவிட்டதால், துருவனின் வலது காலை அகற்றினால் தான் அவரை காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர் இதையடுத்து அறுவை சிகிச்சை செய்து அவரது வலது கால் அகற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து குண்ட்லுப்பர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து நடந்த இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பிரபல நடிகர் ராஜ்குமார் குடும்பத்தின் நெருங்கிய உறவினரான துருவனை, சிவராஜ்குமார் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறியதாக கூறப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement