• Jul 25 2025

கணவரை பிரிந்த நடிகையுடன் அப்படி இருக்க ஆசைப்படும் பிரபல நடிகர்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 கணவரை பிரிந்து இருக்கும் நடிகையுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்க ஆசைப்படுகிறாராம் அந்த சிங்கிளான மாஸ் நடிகர்.

 பிஞ்சிலேயே பழுத்த அந்த நடிகர் ஊருக்கு முன்பாய் பெரிய இடத்து பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பெரிய வீட்டு பெண்ணுக்கு இருந்த போட்டி காரணமாக முந்திரிக் கொட்டைத்தனாமாக சில வேலைகளை செய்து பெரிய குடும்பத்துக்கு திடீரென மருமகனானார். திருமணம் ஆன கையோடு குழந்தைகளையும் பெற்று குடும்பத் தலைவராக செட்டிலானார் நடிகர்.

பெரிய குடும்பத்தில் மருமகனான நேரம், நடிகரின் சினிமா கெரியரும் மளமளவென உயர்ந்தது. திரையுலகில்  டாமினேட் செய்தாலும் நடிகரின் வீட்டில் மனைவியின் ஆதிக்கம் அதிகரிக்க, வெளியில் நிம்மதி தேட ஆரம்பித்தாராம் நடிகர். அத்தோடு நிம்மதி தேடி அலைந்த நடிகருக்கு நடிகைகளின் அரவணைப்பு கிடைக்க, அப்படியே ரூட்டை மாற்றி விட்டதாக கூறப்பட்டது.

அதையே அட்வான்டேஜ்ஜாக எடுத்துக்கொண்ட நடிகர், தனது அந்தஸ்த்தையும் செல்வாக்கையும் காட்டி ரோமியோவாக சுற்றுவதாகவும் கோலிவுட் தரப்பில் பேச்சுக்கள் எழுந்தன. அத்தோடு நடிகரின் வேலைகள் காதல் மனைவிக்கு தெரிய வர திருமண பந்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தார். எனினும் இதையடுத்து கணவரின் உறவை முறித்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்ற நடிகரின் மனைவி குழந்கைளுடன் அங்கேயே செட்டிலாகி விட்டார்.

மீண்டும் நடிகருடன் சேர்ந்து வாழும் பேச்சுக்கே இடமில்லை என உறதியாக கூறி விட்டாராம் மனைவி. இதனால் நடிகர் விரைவில் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள உள்ளார் என வதந்திகள் பரவின. ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்ற முடிவில் இருக்கும் நடிகர் ஏற்கனவே கணவரை பிரிந்த நடிகையுடன் நட்பை தொடர திட்டமிட்டுள்ளதாக பேசி வருகின்றனர் கோடம்பாக்கத்தினர்.

அத்தோடு நடிகர் தனது முடிவில் உறுதியாக இருப்பதால்தான் சமாதான பேச்சுக்கும் உடன்படாமல் இருந்து வருகிறார் என்றும் கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தினர். நடிகர் தற்போது கடன் நெருக்கடியிலும் சிக்கியுள்ளாராம். நடிகரின் கடன் பிரச்சனையில் சிக்கியிருப்பதற்கு காரணம் அவரது பிடிவாதமும் பகட்டு வாழ்க்கையும்தான் என்று கூறி வரும் கோலிவுட்காரர்கள், இப்படியே போனல் நடிகர் இதுவரை சம்பாதித்த அனைத்தையும் இழந்துவிடுவார் என்றும் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement